இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நேற்றைய (புதன்கிழமை) நிலைவரப்படி 213 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பண்டிகைக் காலங்களில் ஒமிக்ரோன் பரவிலின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் 10 சதவீதம் பாசிட்டிவ் இருந்தால் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.