இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி சென்றதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தாருடன் நேற்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருப்பதி சென்றுள்ளார்.
இதற்காக அவர் தங்கும் விடுதி, கோவில் வளாகம், அவர் செல்லும் பகுதிகள், மலைப்பாதை போன்ற பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர் தங்கும் விடுதி அருகில் இருக்கும் இடங்களிலும் கண்காணிப்பு பொலிஸார் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் இந்தியாவைச் சென்றடைந்த பிரதமர், இன்று காலை சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அத்தோடு, இன்று மாலை வரை திருமலையில் தங்கும் அவர் நாளை நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.