இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் என முதன்முதலில் ஒமிக்ரோனை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க நிபுணர் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய தடுப்பூசிகள் தொற்று பரவலைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஏஞ்சலிக் கோயட்சி. என்ற நிபுணரே கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ‘ஒமிக்ரோன்’ வைரசை அடையாளம்கண்டவர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் பரவியுள்ள ‘ஒமிக்ரோன் குறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ஒமிக்ரோன் அச்சுறுத்தவில்லை என்றும் வேகமாக பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் எனினும் தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போலவே பெரும்பாலானோருக்கு நோயின் தீவிரம் லேசாக இருக்கும் என தெரிவித்தார்.