மியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
குறித்த உடல்களை கண்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரைக் காணவில்லை என சர்வதேச தொண்டு நிறுவனமான சேவ் தி சில்ரன் கூறியுள்ளது.
பொதுமக்களை அவர்களின் கார்களில் இருந்து கட்டாயப்படுத்தி இறக்கியதாகவும் சிலரை கைது செய்தனர் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் சிலரைக்கொலை செய்ததுடன் அவர்களின் உடல்களை கிழக்கு கயா மாநிலத்தில் எரித்தனர் என்று தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பெப்ரவரியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மியன்மார் முழுவதும் பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.