சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாரத்தில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு நேற்று சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் போராட்டங்களை தடுக்கும் வகையில், நகரத்தில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை இராணுவம் தடை செய்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையும் தாண்டி போர்ட் சூடான் உட்பட மற்ற நகரங்களும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒக்டோபர் 25 அன்று இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வார இறுதியில், நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்ட்டூமில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது பொலிஸாருடன் நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பாதுகாப்புத்தரப்பினர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.