கொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கு தடைகளை விதித்துள்ளன.
மேலும் சமூக விலகல் விதிகளை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதோடு பொது கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கான வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இங்கிலாந்தில் எந்த கட்டுப்பாடுகளையும் அறிவிக்காத பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தேவைப்பட்டால் அதற்கு தயங்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியான லண்டனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக கருதப்படுகிறது.