நீண்ட காலத்திற்கு பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் அஷ்வினின் இடம்பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சமீபத்தில் நடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண தெரிவுக்கு முன்னர் கடந்த நான்கு ஆண்டுகளில் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தெரிவுக்குழு ரேடாரில் அஷ்வினின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இறுதியாக 2017 ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.