கிரேக்க தீவான கிரீட்டில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நாட்டின் புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் மாலை 5:15 மணிக்கு ஏற்பட்டதாக ஏதென்ஸின் தேசிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அதன் மையப்பகுதி சித்தியாவிற்கு கிழக்கே 71 கிமீ தொலைவிலும், கசோஸ் தீவின் தென்மேற்கே 48 கிமீ தொலைவிலும் கடல் பகுதியில் இருந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன.
ஏஜியன் தீவிலும் மாலை 6 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3 அளவிலான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தரவு காட்டுகிறது.
உள்ளூர் செய்தித் தளங்களின்படி, இதுவரை காயங்கள் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், ஆழமற்ற பூகம்பங்கள் பூமியின் மேற்பரப்பிற்கு நெருக்கமாக இருப்பதால் அவை மிகவும் வலுவாக உணரப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, ஒக்டோபரில், கிரீட்டின் தெற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சைப்ரஸ் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.