பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் நாட்டுக்கு உதவும் என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் அவ்வாறான உதவிகள் நாட்டுக்கு கிடைக்காது என அவர் கூறினார்.
ஆகவே சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டிற்கு சாதகமாக இருக்கும் என நம்பினால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.