எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறித்த போராட்டத்தை நேற்று (சனிக்கிழமை) இரவு முன்னெடுத்துள்ளனர்.
தவலந்தென்ன பகுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் 50க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கொத்மலை மற்றும் இறம்பொடை போன்ற பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபாட்டமை குறிப்பிடத்தக்கது.