கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குன்வர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலன்களில் உள்ள பட்டியலை மத்திய வங்கிக்கு அனுப்பி தேவையான பரிந்துரைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதனை அடுத்து சீனி , பருப்பு, அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுடன் காணப்படும் கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என அவர் கூறினார்.
அதேநேரம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அமைச்சர் பந்துல குன்வர்தன உறுதியளித்தார்.