அடுத்த வருடம் நாட்டில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்து பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்றுவரை அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவித வேலைத்திட்டம் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.
அத்தோடு நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அரசதரப்பினர் பெருமை பேசிக்கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள அதேநேரம் இந்த நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
எவ்வாறாயினும், நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.