புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால் புத்தாண்டு ஈவ் வெளியில் கொண்டாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைச்சர்கள் தரவை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், மக்கள் தங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும் கிறிஸ்மஸில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.
இங்கிலாந்தில் டிசம்பர் 25ஆம் திகதி 113,628 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, டிசம்பர் 26ஆம் திகதி 103,558 மற்றும் டிசம்பர் 27ஆம் திகதி 98,515 தொற்றுகளை பதிவுசெய்துள்ளன.
அதே மூன்று நாட்களுக்கு ஸ்கொட்லாந்திற்கான தற்காலிக தரவு, கிறிஸ்மஸ் தினத்தன்று 8,252 தொற்றுகள் இருந்தன, அடுத்த நாள் 11,030 மற்றும் திங்கட்கிழமை 10,562 தொற்றுகள் இருந்தன.