ஓமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல், தொலைதூரத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும். மேலும், பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் 100,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்ததால் இந்த செய்தி வந்துள்ளது.
இதுவே பிரான்ஸில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
ஆனால், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், புத்தாண்டை முன்னிட்டு முடக்கநிலை உத்தரவை கொண்டு வரவில்லை.
நோய்த்தொற்றுகள் அதிகரித்து, புதிய ஓமிக்ரோன் மாறுபாடு கண்டம் முழுவதும் பரவுவதால், ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகள் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றன.
நோய்த்தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் சேருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைவு. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளை மூழ்கடிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது.