எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் பெட்ரோலின் விலை தற்போது 130 முதல் 140 வரை இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அன்று எரிபொருள் விலை சூத்திரத்தை கேலி செய்தவர்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்தார்.
எரிபொருள் விலை கட்டுப்பாட்டிற்கு விலை நிர்ணய நிதியத்தை அமைப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில் அதற்கு என்ன ஆனது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தற்போது மரக்கறிகளின் சராசரி விலை கிலோ 400 ஆக இருக்கும் அதேவேளை மிளகாயின் விலை 1000 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே நாட்டிற்குள் காணப்படும் நெருக்கடிகளைத் தீர்க்கும் திறமை கொண்ட ஒருவரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன கூறினார்.