நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
ஏற்கனவே தாம் அறிவித்தப்படி உத்தியோகப்பூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருப்பதாக அவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் தொடர்ந்தும் நிலவி வந்த டொலர் பற்றாக்குறைக் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்க நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் விரைவில் டொலர் கையிருப்பை 3 பில்லியன் டொலர்களாக உயர்த்தப் போவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் இலங்கை பொருளாதார உதவிகளை கோரியிருந்தது.
அதேநேரம் பங்களாதேஷ் வங்கியில் இருந்து ஏற்கனவே பெற்ற 200 பில்லியன் டொலர்களை மீளச் செலுத்தும் காலத்தை நீடிக்க விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.