சீனோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று உறுதிபடுத்தினார்.
இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தடுப்பூசி கொள்வனவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இலங்கை டொலர் நெருக்கடியை எதிர்நோக்கும் நேரத்தில் இந்த 17 பில்லியன் தொகையானது மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தடுப்பூசி அளவுகள் வாங்கும் போது முறைகேடு நடந்ததாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த நடவடிக்கை நல்ல பதிலடி என்று அவர் கூறினார்.