சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நீண்ட நாட்களுக்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் பாதித்த 45 பேருமே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரவு நேர ஊரடங்கு, பாடசாலைகள் திறப்பில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.