ஒமிக்ரோன் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ், சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் சமூக இடைவெளியுடன் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளக அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 2 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பிரான்ஸில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளமா காணப்பட்ட நிலையில் இந்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரோன் மாறுபாடு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.