அறிகுறி தென்படாத கொரோனா தொற்று நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் நாட்களை 10 இல் இருந்து ஐந்தாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மற்ற ஐந்து நாட்களுக்கு ஏனையவர்களை சந்திக்கும்போது முடக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளனர்.
அறிகுறிகள் தென்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் மூன்று நாட்களுக்குப் பிறகும் பெரும்பாலும் கொரோனா தொற்று பரவலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இப்போது அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்று ஆதிக்கம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.