இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக, ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
31.12.2021: We declare 41 new cases of Omicron from our lab (A total of 45 confirmed our lab so far). We are equipped. Please use the booster vaccine to protect you and your loved ones!
— Chandima Jeewandara (@chandi2012) December 31, 2021