கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 231 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,725 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 587,245 ஆக உள்ளது. அதில் 14,979 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.