இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால், புதிதாக 124 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 11 ஆயிரத்து 7 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் 1 இலட்சத்து 71 ஆயிரத்து 830 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.