கடந்த ஜூலை மாதம் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலம்பிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
43 வயதான மரியோ அன்டோனியோ பலாசியோஸ் என்ற நபர் ஹைட்டி அதிபரை கடத்த அல்லது கொலை சதியில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க செவ்வாய்க்கிழமை மியாமி நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகளால் ஜூலை 7 ஆம் திகதி மொய்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை தொடர்பாக ஹைட்டியில் பலர் கைது செய்யப்பட்டாலும், பலாசியோஸ் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் சந்தேக என்பது குறிப்பிடத்தக்கது.