எரிபொருள் விலையேற்றத்தால் தூண்டப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ரஷ்ய தலைமையிலான இராணுவ துருப்புக்களை கஸகஸ்தான் இராணுவம் களமிறக்கவுள்ளது.
நாடு தழுவிய அமைதியின்மை அதிகரித்து வருவதால், ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் ஆதரவைக் கோரினார். இந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லண்டனில் உள்ள சத்தம் ஹவுஸ் வெளியுறவுத்துறையின் மத்திய ஆசியா குறித்த நிபுணரான கேட் மல்லின்சன் கூறுகையில்,
‘இந்த எதிர்ப்புக்கள் கசாக் அரசாங்கம் தங்கள் நாட்டை நவீனமயமாக்கி அறிமுகப்படுத்தத் தவறியதில் மிகவும் ஆழமான மற்றும் கொதித்தெழுந்த கோபம், வெறுப்பின் அறிகுறியாகும். அனைத்து மட்டங்களிலும் மக்களை பாதிக்கும் சீர்திருத்தங்களும் அடங்கும்’ என கூறினார்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தொலைக்காட்சி உரையில், ‘நாட்டை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக ரஷ்யா மற்றும் ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளைக் கொண்ட இராணுவக் கூட்டணியான சி.எஸ்.டி.ஒ.விடம் உதவி கேட்டதாகக் ஜனாதிபதி டோகாயேவ் கூறினார்.
அத்துடன், அமைதியின்மை வெளிநாட்டு பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல்களின் வேலை என்றும் சாடினார்.
இதனிடையே ஜனாதிபதி நாடு தழுவிய அவசரகால நிலையை விதித்துள்ளார். அதில் ஒரே இரவில் முடக்கநிலை உத்தரவு மற்றும் வெகுஜனக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் போராட்டங்களுக்கு கடுமையான பதிலளிப்பதாக சபதம் செய்துள்ளார்.
கஸகஸ்தானில் நிலைமையை நெருக்கமாகப் பின்தொடர்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.