அமெரிக்க கேபிடல் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை சான்றளிக்க காங்கிரஸ் கூடியபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் கட்டடத்தை முற்றுகையிட்டனர்.
அமெரிக்க அரசியல்வாதிகள், ட்ரம்பின் ஆதரவாளர்களிடம் இருந்து பயமுறுத்தும் நேரடி காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கேபிடல் கட்டட தாக்குதல் சம்பவம் அமெரிக்க அரசியல் வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்நிகழ்வு நடந்து முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த பைடன்,
‘தனது ஆதரவாளர்களிடம் காங்கிரஸை நோக்கி அமைதியாக பேரணியை நடத்தச் சொன்ன ட்ரம்ப், போராடவும் ஊக்குவித்தார். தான் தோற்ற தேர்தலில் பெரிய அளவில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமின்றி கூறினார்’ என கூறினார்.
ஜோ பைடன் ட்ரம்பை கடுமையாக விமர்சித்தனைத் தொடர்ந்து, ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘தேர்தலைத் குறித்து பைடன் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கேபிடல் கட்டட முதலாமாண்டு நிறைவைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளனர்.