இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
நாட்டில் புதிதாக 1 இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 285 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதுடன், 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இதுவரை 3 ஆயிரத்து 71 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.