2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இறக்குமதி அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் இறக்குமதி 19.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் 2020 ஆம் ஆண்டில் அது 16.1 பில்லியனாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.