யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்ரஸ்க்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்தே இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.