தமிழகத்தில் இரண்டாவது தடுப்பூசி போடாமல் 90 இலட்சம் பேர் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தில் மாத்திரம் தான் வீடுதேடி தடுப்பூசி போடும் திட்டம், வாரம் தோறும் மெகா தடுப்பூசி திட்டம் என்பன நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தவணை தடுப்பூசியை 50,60 வயது உள்ளவர்களுக்கு பெரும்பாலும் போடாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி 60 ஆயிரத்து 51 பேருக்கு போடப்பட்டுள்ளது. போடாதவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அறிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.