பால்டிக் தேசத்தில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறந்தமை தொடர்பாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், லிதுவேனியா, சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தைத் தடுத்துள்ளது.
‘சீன நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தை லிதுவேனியா தடுத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் சீனாவை பொருளாதார நிர்ப்பந்தம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது’ என குளோபல் டைம்ஸ் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
சீனாவிற்கும் பால்டிக் நாட்டிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த நவம்பர் மாதம் லிதுவேனியா சீனாவை கோபப்படுத்தியது, தாய்வான் தூதரகத்திற்கு சமமான பிரதிநிதி அலுவலகத்தை திறப்பதற்கு லிதுவேனியா அனுமதித்தது.
தாய்வானுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு லிதுவேனியா நடவடிக்கை எடுத்ததன் பின்னர் அண்மைய காலங்களில் இந்தப் பதற்றம் அதிகரித்துள்ளது. தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுகிறது.
அறிக்கையொன்றின்படி, லிதுவேனியா உலகின் பொருளாதார மற்றும் அரசியல் வல்லரசுகளில் ஒன்றிற்கு எதிராக தனியாகப் போராடி வருவதால், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள மேற்கு மற்றும் பிற வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு தேவை என கூறப்படுகிறது.
ஹொங்கொங் போஸ்ட், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் எதேச்சதிகாரம் மற்றும் பெய்ஜிங்கின் ஆக்கிரமிப்பு நடத்தை ஆகியவற்றை வெளிப்படையாக எதிர்க்கத் துணிந்ததால், சீனாவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக அடையாளம் காணும் நாடுகளில் லிதுவேனியா முன்னணியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
‘லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநிதி அலுவலகம்’ என்ற பெயரில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் மூலம் பிரதான நிலப்பகுதியிலிருந்து தாய்வானின் தனியான சட்டப்பூர்வ நிறுவனத்தை அங்கீகரிப்பதை மறைமுகமாக குறிக்கிறது. இதன் காரணத்தினால் பெய்ஜிங், லிதுவேனியாவுடன் இராஜதந்திர உறவுகளை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.
சீனா அத்தாக்குதலின் அதியுச்சமாக இந்த மாதம் லிதுவேனிய அதிகாரிகள் தங்கள் இராஜதந்திர அந்தஸ்தைக் குறைக்கும் பொருட்டு அவர்களின் அடையாள ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கோரியது.
இந்த கோரிக்கை லிதுவேனியாவிற்கு மிகவும் கவலையாக இருந்தது, இதனால் டிசம்பர் நடுப்பகுதியில் சீனாவில் இருந்து எஞ்சியிருந்த தூதரக அதிகாரிகளை அவர்களின் பாதுகாப்பு கரிசனையைக் காண்பித்து மீள அழைத்தது லிதுவேனியா.
மேலும், சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதையின் ஒரு பகுதியாக லித்துவினியாவை இணைக்கும் சரக்கு புகையிரதங்களின் இயக்கத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது.
ஹொங்கொங் போஸ்ட்டின் தகவல்களின் படி, லிதுவேனியவுக்கான உணவு ஏற்றுமதி உரிமவிண்ணப்பங்களையும் சீனா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.