ஒரு தசாப்தத்திற்கு முன்னர் டமாஸ்கஸ் அருகே உள்ள சிறையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக, சிரியாவின் முன்னாள் கர்னல் அன்வர் ரஸ்லானுக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கோப்லென்ஸில் உள்ள மாநில நீதிமன்றத்தின் இன்றைய (வியாழக்கிழமை) முக்கிய தீர்ப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக நடந்த போரின் போது ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தின் கைகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எண்ணற்ற சிரியர்களுக்கு நீதிக்கான முதல் படியை இந்த தீர்ப்பு குறிக்கிறது.
கொலை, சித்திரவதை, மோசமான சுதந்திரம் பறித்தல், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களுக்காக கைதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
58 வயதான ரஸ்லான், சிரியாவில் நடந்த அட்டூழியங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மிக உயர்ந்த பதவியில் உள்ள முன்னாள் அரசாங்க அதிகாரி ஆவார். அத்துடன், சிரியாவில் அரசாங்கம் நடத்தும் சித்திரவதை தொடர்பாக உலகின் முதல் கிரிமினல் வழக்கு இதுவாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ஆம் ஆண்டு செப்டம்பருக்கிடையில் சிரிய தலைநகரில் உள்ள அல்-காதிப் சிறையில் 4,000க்கும் மேற்பட்டவர்களை முறையான மற்றும் கொடூரமான சித்திரவதைகளை ரஸ்லான் மேற்பார்வையிட்டார். இதன் விளைவாக குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டனர் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
சிறைச்சாலையில் கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், மின்சார அதிர்ச்சி, முஷ்டி, கம்பிகள் மற்றும் சாட்டையால் அடித்தல் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை அவர் மேற்பார்வையிட்டதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
2012ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகி சிரியாவை விட்டு வெளியேறிய ரஸ்லான், 2014ஆம் ஆண்டு ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தார். அத்துடன் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சிரிய ஜனாதிபதி அல்-அசாத்தின் கீழ் பணியாற்றிய ரஸ்லான், ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிரான வெகுஜன அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்தினார். ரஸ்லான், சிரிய இரகசிய சேவைகளில் 18 ஆண்டுகள் பணியாற்றினார், அங்கு அவர் உள்நாட்டு உளவுத்துறை விசாரணை சேவையின் தலைவராக உயர்ந்தார்.