அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் பதட்டமான நிலையை ஏற்படுத்தி வருகின்றார்.
பிணைப் பிடித்தவர் ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிற அதேநேரம் சில இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளைத் தாக்கி சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய நரம்பியல் விஞ்ஞானியை விடுவிக்க கோரியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிணை பிடித்தவர் தன்னைச் சிறையில் உள்ள கைதி ஒருவரின் சகோதரர் என்றும் தனது சகோதரர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.