பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னடுத்து வருகின்றது.
அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.