உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜொகோவிச் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ருகின்றது.
இணையவாளியாக இடம்பெறும் இந்த அவசர விசாரணை இன்று காலை ஆரம்பமானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ஜொகோவிச் தோல்வியுற்றால் நாடு கடத்தப்படுவதோடு மூன்று ஆண்டுகள் அவுஸ்ரேலியாவுக்கான வீசாவை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவுக்குள் நுழையவதற்கு அவசியமான தடுப்பூசியை அவர் செலுத்தி இருக்கவில்லை என்பதனால் அவுஸ்ரேலியா குடிவரவு அமைச்சர் அவரது வீசா அனுமதியை இரத்து செய்தார்.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ‘பகுத்தறிவற்றது மற்றும் நியாயமற்றது’ என நோவக் ஜொகோவிச்சின் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.