ஹைட்டி ஜனாதிபதி கொலையில் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஹைட்டி செனட்டரை ஜமைக்கா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜான் ஜோயல் ஜோசப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா கான்ஸ்டபுலரி படையின் ஊடக பேச்சாளர் டென்னிஸ் புரூக்ஸ் தெரிவித்தார்.
ஜூலை 7 அன்று ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகளால் ஹைட்டி ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனை அடுத்து ஜோசப் ஆயுதங்களை வழங்கியதாகவும் திட்டமிட்டதாகவும் அப்போதைய தேசிய பொலிஸ் தலைவர் லியோன் சார்லஸ் கூறினார்.