பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு உள்ளதாக ஐ.நா சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.மூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கில் மீண்டும் களத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
அல்கொய்தா ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் அல் கொய்தாவின் தொடர்புகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.