பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் வரவுசெலவு திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் பெப்ரவரி முதலாம் திகதி 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.