இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.
குறித்த நன்கொடை எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.
1952ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனா இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.