நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள திவிநெகும வழக்கின் சாட்சிய விசாரணையை இன்றுடன் முடிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் சாட்சிய விசாரணையை இன்றுடன் முடிப்பதற்கும், தீர்ப்பை பெப்ரவரி முதலாம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.