மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரித் ஜயனாத் தயாரத்ன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கான புதிய பொது முகாமையாளரை பதவி நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.