குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து டெல்லி பொலிஸ் அதிகாரி தீபக் யாதவ் தெரிவிக்கையில், குடியரசு தின விழா நடைபெறும் பகுதி முழுவதும், முக அடையாளத்தை காண்பிக்கும் மென்பொருளுடன் கூடிய கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு பணியில் துணை இராணுவப்படையினர், உள்ள10ர் பொலிஸார், சிறப்பு பிரிவு பொலிஸார், தனிப்பிரிவு பொலிஸார், ஆயுத பொலிஸார் மற்றும் ஸ்வாட் பரிவு, தேசிய பாதுகாப்பு படை குழுவினர் உள்ளிட்ட டெல்லி காவல் துறையின் அனைத்து பிரிவுகளும் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
ட்ரோன் கருவி தடுப்பு ஏற்பாடு அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உயரமான கட்டிடங்களில் பொலிஸார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.