புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திறன்களை நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.