கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூசன் தெரிவிக்கையில், ”நாட்டில் தினசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், 72 சதவீத மக்கள் 2ஆவது டோஸ் தடுப்பூசிகள் போட்டுள்ளனர். இதனால் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற தீவிர பாதிப்புகள் இல்லை.
எனினும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
தொற்று அதிகரிக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.