போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாக, வார்சா நகர உணவங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் தங்களது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியுமென உணவங்கள் நம்புகின்றன.
வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் போலந்து மருத்துவக் சபையின் 17 உறுப்பினர்களில் 13பேர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
போலந்தில் சுமார் 56 சதவீதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.