இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சில சரத்துக்களை உள்ளடக்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த சந்திப்பின்போது தேர்தல் செலவினங்களைக் குறைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.