மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை இந்த ஆட்சியிலேயே இடம்பெற்றது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறல் என அவர் குற்றம் சாட்டினார்.
தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை என ஜனாதிபதி கூறினாலும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை ஆயுதங்களை மீட்பதாக கூறி பொலிஸ் காவலில் உள்ளவர்களை அழைத்து சென்று சுட்டுக் கொன்ற சம்பவமும் இந்த ஆட்சியிலேயே இடம்பெற்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யப்பபோவதாக கூறுவதும் சர்வதேசத்துக்கு பொய்யை கூறி கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சி என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.