மெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பிளாயா டெல் கார்மெனில் உள்ள ஹோட்டல் எக்ஸ்கேரெட் மெக்ஸிகோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியின் புகைப்படங்களை பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் லூசியோ ஹெர்னாண்டஸ் குட்டிரெஸ் இணையத்தில் வெளியிட்டார்.
தாக்குதல் நடத்தியவர், ஹோட்டல் விருந்தாளி, இன்னும் தலைமறைவாக உள்ளனர்,.மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சிசிடிவி புகைப்படங்கள் தாக்குபவர் வெளிர் நீல நிற டிராக்சூட்டில் இருப்பதைக் காட்டுகிறது. ஒரு புகைப்படத்தில் அவர் துப்பாக்கியை வைத்திருப்பதைக் காணலாம். மற்றொன்றில், அவர் மொபைல் ஃபோனை வைத்திருப்பது போல் தோன்றுகிறது மற்றும் மூன்றாவது புகைப்படம் அவர் ஒரு லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
வாதத்தை தூண்டியதாக கருதப்படும் விடயத்தை பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கவில்லை. மேலும், வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘மெக்ஸிகோவில் நடந்த ஒரு சம்பவத்தால் கனேடிய குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவுக்குத் தெரியும். தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும், தூதரக உதவியை வழங்கவும் தயாராக உள்ளனர். தனியுரிமை பரிசீலனைகள் காரணமாக, மேலும் எந்த தகவலையும் வெளியிட முடியாது’ என கூறினார்.
இணைத்தில் வெளியிடப்பட்ட கிராஃபிக் காணொளி, இந்த சம்பவம் வெளிப்புற சாப்பாட்டு பகுதிக்கு அருகில் நடந்ததாகத் தெரிகிறது.
சமீப மாதங்களில் மாயன் ரிவியரா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.