நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் திரிபு உள்ளமை கண்டறியப்பட்டதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று தெரிவித்தார்.
78 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 75 பேருக்கு இவ்வாறு ஒமிக்ரோன் திரிபு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள், கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபான, பாதுக்க, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, கல்கிசை, நுகேகொடை, அங்கொடை, பதுளை, காலி மற்றும் ருவன்வெல்ல முதலான பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.