புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம் இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது 79 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தற்போது சட்ட சிக்கல்கள் உள்ள பதிவு செய்யப்பட்ட 06 கட்சிகள் செயலற்ற அரசியல் கட்சிகளாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பதிவு செய்ய சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மூன்று அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு சமீபத்தில் முடிவு செய்தது.
அதன்படி தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டன.